கூட்டத்தில் ரசிகருக்கு பளார் - நடிகை விளக்கம்
செப் 28, 2022
Advertisement
மலையாளத்தில் உருவாகி உள்ள படம் ‛சாட்டர்டே நைட்". நிவின் பாலி நாயகனாக நடித்துள்ளார். சானியா ஐயப்பன் நாயகியாக நடித்துள்ளார். ரோஷன் ஆண்ட்ரூஸ் இயக்கி உள்ளார். இந்த படத்தின் புரமோஷனுக்காக கோழிக்கோட்டில் ஒரு மாலில் நடிகர் நிவின் பாலி, நடிகைகள் சானியா ஐயப்பன், கிரேஸ் ஆண்டனி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இவர்களின் வருகையால் ஏகப்பட்ட ரசிகர்கள் அங்கு கூடிவிட்டனர். நிகழ்ச்சியை முடித்து திரும்பிய போது கூட்டத்தில் ரசிகர் ஒருவரை சானியா அடிக்க பாய்ந்த வீடியோ வைரலானது.
இதுபற்றி விளக்கமளித்துள்ள சானியா, ‛‛நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களால் கூட கூட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. என்னுடன் வந்த சக நடிகையிடம் சிலர் தவறாக நடந்தனர். கூட்ட நெரிசலால் அவர் எதிர்வினையாற்ற முடியாமல் சென்றுவிட்டார். நானும் அதுபோன்று எதிர்கொண்டேன். அதற்கு பதில் தான் அந்த வீடியோ"" என்றார்.

Tags
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!