ஜி.வி.பிரகாஷ் இசையில் பாடிய சான் ரோல்டன்
ஆக 01, 2023
Advertisement
இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழி படங்களுக்கு இசையமைத்து வருகிறார். தமிழில் விக்ரம், சூர்யா, தனுஷ், சிவகார்த்திகேயன், கார்த்தி என முண்ணனி ஹீரோக்களின் படங்களுக்கு தற்போது பிஸியாக இசையமைத்து வருகிறார். ராஜூ முருகன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகி வரும் படம் "ஜப்பான்" படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் தான் இசையமைத்துள்ளார். இந்த வருட தீபாவளிக்கு படம் வெளியாக உள்ளது. இதன் டீசர் வெளியாகி வரவேற்பை பெற்றது.
விரைவில் இந்த படத்திலிருந்து பாடல்கள் வெளியாகவுள்ளது. இந்நிலையில் ஜி.வி. பிரகாஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் "ஜப்பான் படத்தில் ஒரு குத்து மெலடி பாடலை இசையமைப்பாளர் சான் ரோல்டன் பாடியுள்ளார். தனது சினிமா வாழ்க்கையில் சிறந்த மெலடி பாடலாக அமையும். சான் ரோல்டனுக்கு நன்றி" என பதிவிட்டுள்ளார்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!