
மாற்றுத்திறனாளியாக நடிக்கும் சமுத்திரகனி
ஜூன் 07, 2022
Advertisement
சமுத்திரகனி தமிழ் சினிமாவில் இயக்குனராக மட்டுமல்லாமல் தொடர்ந்து நல்ல படங்களில் நடிகராகவும் நடித்து வருகிறார். சமீபத்தில் அவர் நடித்த "ரைட்டர்", விநோத சித்தம் போன்ற திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது தெலுங்கில் வினோத சித்தம் திரைப்படத்தை ரீமேக் செய்து வருகிறார். இந்த படத்தை அடுத்து "அப்பா 2" படத்தையும் இயக்கவிருக்கிறார். இந்நிலையில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகும் "விமானம்" படத்தில் சமுத்திரகனி மாற்றுத்திறனாளியாக நடித்து வருகிறார். கே.கே.கிரியேட்டிவ் வெர்க்ஸ் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் இணைந்து இப்படத்தை தயாரித்து வருகிறது. தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது.
Tags
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!