
சமந்தாவை கவர்ந்த அல்லு அர்ஜுனின் மகள் ஆரா
மார் 28, 2023
Advertisement
குணசேகர் இயக்கத்தில் சமந்தா கதையின் நாயகியாக நடித்துள்ள படம் சாகுந்தலம். இந்த படம் வருகிற ஏப்ரல் 14ம் தேதி திரைக்கு வருகிறது. இதில் நடிகர் அல்லு அர்ஜுனின் மகள் ஆரா, குட்டி இளவரசி வேடத்தில் நடித்திருக்கிறார். இந்த நிலையில் சாகுந்தலம் படத்தில் ஆராவுடன் நடித்த அனுபவம் குறித்து சமந்தா கூறுகையில், ‛‛அல்லு அர்ஜுனின் மகள் தனது திறமையால் படப்பிடிப்பில் உள்ள அனைவரது மனதையும் கவர்ந்து விட்டார். அவர் புத்திகூர்மை மிக்கவர். அதோடு ஆங்கிலத்தில் பேசாமல் தெலுங்கில் மிகத் தெளிவாக பேசினார். அவருடன் நடித்த அனுபவம் மிக புதுமையாக இருந்தது. பல காட்சிகளில் தனது அசத்தலான நடிப்பால் என்னுடைய மனதை கொள்ளை அடித்துவிட்டார் ஆரா. இந்த ஆரா சூப்பர் ஸ்டாராவதற்காகவே பிறந்தவர். இவர் இந்த சாகுந்தலம் படத்தில் குட்டி இளவரசியாக நடித்திருக்கிறார் என்று தெரிவித்துள்ளார்.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement
















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!