
2 நாயகிகள் அறிமுகமாகும் அங்காரகன்
மலையாள நடிகை நியா மற்றும் மும்பையை சேர்ந்த மாடலான ரெய்னா காரத் இந்த படத்தின் நாயகிகளாக அறிமுகம் ஆகின்றனர். சூது கவ்வும், இன்று நேற்று நாளை மற்றும் மரகதநாணயம் உள்ளிட்ட படங்களுக்கு திரைக்கதை எழுதியிருந்த கருந்தேள் ராஜேஷ் இந்த படத்தின் வசனங்களை எழுதியுள்ளார்.
படம் பற்றி தயாரிப்பாளர் ஜோமோன் பிலிப் கூறும்போது, “இந்த படம் ஒரு ஹாரர் த்ரில்லர் படமாக உருவாகி இருந்தாலும் பாடல்கள் இந்த படத்தில் ஒரு முக்கிய பங்கு வகிக்கும். இந்த படத்திற்கு தேவையான அனைத்து அம்சங்களும் சேர்க்கப்பட்டுள்ளன. வரும் சம்மரில் இந்த படம் ரிலீசுக்கு திட்டமிடப்பட்டுள்ளது” என்றார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!