நடிகைகளின் சம்பளம் : சமந்தா வருத்தம்
மார் 11, 2021
Advertisement
சினிமா உலகை பொறுத்தவரை நடிகைகள் என்ன தான் பிரபலமானவர்களாக, திறமையானவர்களாக இருந்தாலும் அவர்களுக்கான சம்பளம் என்பது ஹீரோக்களை ஒப்பிடும் போது மிகவும் குறைவு. இதுகுறித்து தனது வருத்தத்தை பதிவு செய்துள்ளார் சமந்தா.
அவர் கூறுகையில், ""நடிகைகளுக்கு சம்பளம் என்பது குறைவான அளவே தரப்படுகிறது. ஒரு நடிகை முதல் மூன்று நடிகைகளில் ஒருவராக முன்னணியில் இருந்தாலும் அவருக்கு கொடுக்கப்படும் சம்பளம் ஹீரோக்களை ஒப்பிடுகையில் மிகக் குறைவாகவே உள்ளது. அந்த சம்பளமானது முதல் 20 நடிகர்கள் பட்டியலில் இல்லாத நடிகர்கள் வாங்கும் சம்பளத்தை விட குறைவானதாகவே உள்ளது. இதை சுட்டிக்காட்டி நடிகைகள் சம்பளத்தை அதிகமாக கேட்டால் பிரச்சினையாக்கி விடுகிறார்கள். ஆனால் ஹீரோக்கள் படத்துக்குப்படம் கோடிகளை உயர்த்தினாலும் மறுபேச்சு பேசாமல் கொடுக்கிறார்கள். இது என்ன நியாயம் என்று தனது கருத்தினை துணிச்சலாக தெரிவித்துள்ளார் சமந்தா.

Tags
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!