
சீரியலில் என்ட்ரி கொடுக்கும் சாக்ஷி அகர்வால்
மே 29, 2022
Advertisement
சீரியல்களின் டிஆர்பிக்காக அவ்வப்போது திரை பிரபலங்களை கெஸ்ட் ரோலில் நடிக்க வைப்பது சின்னத்திரையில் தற்போது வாடிக்கையாகிவிட்டது. அதிலும், பிக்பாஸ் நிகழ்ச்சி சின்னத்திரை ரசிகர்களிடம் அதிகம் ரீச்சாகியிருப்பதால் அதில் வந்த செலிபிரேட்டிகளை கெஸ்ட் ரோலில் டிவி சேனல்கள் போட்டு வருகின்றனர். அந்த வகையில் வனிதா விஜயகுமார், சுஜா வருணிக்கு பிறகு இன்ஸ்டாகிராமின் கவர்ச்சி கன்னி சாக்ஷி அகர்வாலும் சீரியலில் நடிக்க இருக்கிறார். கண்ணானே கண்ணே தொடரில் விரைவில் துணிந்து நில் என்ற ஸ்பெஷல் எபிசோடு ஒளிபரப்பாக உள்ளது. அதில் தான் சாக்ஷி அகர்வால் கெஸ்ட் ரோலில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எனினும், இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்போ, ப்ரோமோவோ இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Tags
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!