20 ஆண்டுகளுக்கு பின் ரீ-ரிலீஸாகும் ‛சச்சின்
பிப் 11, 2025
Advertisement
மறைந்த இயக்குனர் மகேந்திரனின் மகன் ஜான் மகேந்திரன், 2005ல் இயக்குனராக அறிமுகமான படம் ‛சச்சின்". விஜய், ஜெனிலியா, வடிவேலு, பிபாஷா பாசு ஆகியோர் முதன்மை வேடத்தில் நடித்தனர். தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்தார். தாணு தயாரித்தார்.
விஜய் - ஜெனிலியாவின் காதல், அவர்களுக்குள்ளான ஈகோ மற்றும் வடிவேலுவின் காமெடி, சூப்பர் ஹிட் பாடல்கள் போன்ற பிளஸ் அம்சங்கள் இந்த படத்தை ரசிக்க வைத்தன. இருப்பினும் அந்த சமயம் ரஜினியின் ‛சந்திரமுகி" படமும் வெளியானதால் இந்தப்படம் பெரியளவில் வசூலிக்கவில்லை. ஆனால் சச்சின் படத்திற்கு தனி ரசிகர்கள் உண்டு. இப்போது அந்த படத்தை டிவியில் ஒளிபரப்பினாலும் ரசிகர்கள் ரசிப்பர்.
இந்நிலையில் சச்சின் படம் வெளியாகி இந்தாண்டோடு 20 ஆண்டுகளை கடக்கிறது. இதையொட்டி இந்த படத்தை ரீ-ரிலீஸ் செய்ய போவதாக இப்பட தயாரிப்பாளர் தாணு அறிவித்துள்ளார். இந்தகாலத்திற்கு ஏற்றபடி தொழில்நுட்ப ரீதியாக படம் மெருகூட்டப்பட்டு கோடையில் படத்தை வெளியிட முடிவு செய்துள்ளனர். இந்த விஷயம் விஜய் ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!