சச்சின் ரீ-ரிலீஸ்…லிரிக்கல் வீடியோ இன்று ரிலீஸ்
மார் 01, 2025
Advertisement
ரீ-ரிலீஸ் டிரெண்ட் தமிழ் சினிமாவில் சமீபகாலத்தில் அதிகரித்துள்ளது. ஏற்கெனவே வெளியாகி வெற்றி பெற்ற படங்களை புதிய தொழில்நுட்ப மாற்றத்திற்கேற்றபடி அப்டேட் செய்து வெளியிட்டு வருகிறார்கள்.
அந்த விதத்தில் ஜான் இயக்கத்தில், தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைப்பில், விஜய், ஜெனிலியா, வடிவேலு மற்றும் பலர் நடிப்பில் 2005ம் ஆண்டில் வெளிவந்த "சச்சின்" படத்தை இந்த வருட கோடை விடுமுறையில் மீண்டும் வெளியிட உள்ளார்கள்.
படம் வெளிவந்த போது வியாபார ரீதியாக வெற்றி பெறவில்லை. ஆனால், அதன்பின் அந்தப் படத்தின் நகைச்சுவைக் காட்சிகளும், பாடல்களும் டிவியில் ஒளிபரப்பாகும் போதெல்லாம் அதை ரசித்துப் பார்த்தவர்களின் எண்ணிக்கை அதிகம்.
படம் வெளிவந்த போது டிவி சானல்களில், மியூசிக் சானல்களில் அதிகம் ஒளிபரப்பான பாடல்களாக "சச்சின்" பாடல்கள் அமைந்தது. அப்படத்தில் இடம் பெற்ற பாடல்கள் அனைத்துமே சிறப்பாக படமாக்கப்பட்டவை.
ஏற்கெனவே வந்த படத்தை ரீ-ரிலீஸ் செய்யும் போது புதிதாக டிரைலரை வேண்டுமானால் ரிலீஸ் செய்வார்கள். ஆனால், "சச்சின்" படத்திற்காக லிரிக் வீடியோவை புதிதாக வெளியிடுகிறார்கள். இன்று மாலை அது வெளியிடப்பட உள்ளது. இந்த டிரெண்டை இனி வெளியாக உள்ள ரிரிலீஸ் படங்களுக்கும் ஆரம்பித்துவிடுவார்கள்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!