
மாஸ்டர்ஐ சம்பவம் செய்த குட் பேட் அக்லி
நேற்று வெளியான டீசரில் அஜித்தின் விதவிதமான தோற்றங்கள் அவரது ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்துள்ளது. அதனால்தான் அவர்கள் டீசரைத் திரும்பத் திரும்பப் பார்த்து அதன் பார்வைகளை அதிகப்படுத்தி வருகிறார்கள்.
24 மணி நேரம் முடிய இன்னும் 7 மணி நேரம் உள்ள நிலையில் இப்போது 25 மில்லியன் பார்வைகளை அந்த டீசர் கடந்துள்ளது என அறிவித்துள்ளார்கள். தமிழ் சினிமாவில் இதுவரை வெளிவந்த டீசர்களின் 24 மணி நேர சாதனையில் இது புதிய சாதனை.
இதற்கு முன்பு விஜய் நடித்து வெளிவந்த "மாஸ்டர்" டீசர் 24 மணி நேரத்தில் 19.3 மில்லியன் பார்வைகளைப் பெற்றதே சாதனையாக இருந்தது. "மாஸ்டரை" சம்பவம் செய்து முதலிடத்தைப் பிடித்துள்ளது "குட் பேட் அக்லி" டீசர்.
ஏப்ரல் 10ம் தேதி வெளியாக உள்ளது "குட் பேட் அக்லி".





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!