
அதிரடி ஆக் ஷன் காட்டும் ‛ருத்ரன்
ஏப் 06, 2023
Advertisement
தயாரிப்பாளர் கதிரேசன் முதன்முறையாக இயக்கி உள்ள படம் ருத்ரன். ராகவா லாரன்ஸ், சரத்குமார், பிரியா பவானி சங்கர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம் ,கன்னடம் என நான்கு மொழிகளில் தயாராகியுள்ள இது படம் வருகிற ஏப்ரல் 14ஆம் தேதி தமிழ் புத்தாண்டு தினத்தில் திரைக்கு வருகிறது. ருத்ரன் படப்பிடிப்பு முடிந்து இறுதிகட்டப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் டிரைலர் வெளியிடப்பட்டுள்ளது. இரண்டு நிமிடங்கள் ஓடக்கூடிய இந்த டிரைலர் ஜனரஞ்சகமான ஆக் ஷன் கதையில் உருவாகியுள்ளது. அதோடு காஞ்சனா படத்தில் இடம்பெற்றது போன்று கிளைமாக்ஸ் சண்டைக்காட்சியில் ஒரு அதிரடியான பாடலும் இடம் பெற்றுள்ளது. இந்த ருத்ரன் டிரைலர் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது .
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!