
‛ருத்ரன் ரிலீஸ் தள்ளி வைப்பு
செப் 27, 2022
Advertisement
ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகி வரும் படம் ‛ருத்ரன்". தயாரிப்பாளர் கதிரேசன் இந்த படம் மூலம் இயக்குனராக களமிறங்கி உள்ளார். நாயகியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார். ஆக் ஷன் கலந்த திரில்லர் படமாக உருவாகிறது. இந்த படம் இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகிறது. வருகிற கிறிஸ்துமஸ் தினத்தில் படம் வெளியாகும் என முன்பு அறிவித்திருந்தனர். ஆனால் படத்தில் நிறைய கிராபிக்ஸ் காட்சிகள் இருப்பதால் அந்த பணிகள் நிறைவடைய கூடுதல் காலம் தேவைப்படுவதால் ரிலீஸை தள்ளி வைப்பதாக அறிவித்துள்ளனர். அதன்படி படம் அடுத்தாண்டு தமிழ் புத்தாண்டான ஏப்., 14க்கு தள்ளி வைக்கப்படுவதாக அறிவித்துள்ளனர்.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!