மகனின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடிய ரோஜா
ஜூன் 29, 2021
Advertisement
கடந்த 1992-ம் ஆண்டு ஆர்.கே.செல்வமணி இயக்கத்தில் "செம்பருத்தி" படத்தில் நடிகையாக அறிமுகமானவர் ரோஜா. தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிப் படங்களிலும் ஹீரோயினாக நடித்துள்ளார் ரோஜா. 2002-ம் ஆண்டு ஆர்.கே.செல்வமணி - ரோஜா திருமணம் நடைபெற்றது. இத்தம்பதிக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். நடிப்பைத் தாண்டி அரசியலில் நுழைந்த ரோஜா, 2014-ம் ஆண்டு ஆந்திராவின் நகரி தொகுதியில் எம்.எல்.ஏ.வாக தேர்வு செய்யப்பட்டார்.
தற்போது ஆந்திர அரசின் தொழிற்சாலைகள் மற்றும் உள்கட்டமைப்பு கழகத்தின் தலைவராக இருக்கும் ரோஜா தனது கணவர், குழந்தைகளுடன் மகனின் பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். ஆர்.கே.செல்வமணி - ரோஜா தம்பதியின் மகன் கவுசிக்கிற்கு நேற்று பிறந்தநாள். இதையொட்டி மகனின் பிறந்தநாளை நடிகை ரோஜா கோலாகலமாக கொண்டாடியுள்ளார். பிறந்தநாள் கொண்டாடிய புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை ரோஜா வெளியிட்டுள்ளார். ரோஜாவின் மகனுக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Tags
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!