கராத்தேவில் பிளாக் பெல்ட் வாங்கிய ரித்திகா சிங்
ஜூலை 15, 2023
Advertisement
குத்துச் சண்டை வீராங்கனையான ரித்திகா சிங், சுதா கொங்கரா இயக்கிய "இறுதிச்சுற்று" படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அந்த படத்தில் அவர் குத்துச்சண்டை வீராங்கனையாகவே நடித்திருந்தார். இந்த படம் பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. அதன் பிறகு சிவலிங்கா, ஓ மை கடவுளே உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். என்றாலும் ஒரு ஹீரோயினாக நிலையான ஒரு இடத்தை அவரால் பிடிக்க முடியவில்லை.
இந்த நிலையில் தனது குத்துச் சண்டை பயிற்சியை மீண்டும் தொடங்கிய ரித்திகா கூடுதலாக கராத்தே பயிற்சியும் பெற்று வந்தார். தற்போது கராத்தே பயிற்சியில் முக்கியமான நிலையான பிளாக் பெல்ட் வாங்கியுள்ளார். அவருடன் அவரது தந்தையும் பிளாக் பெல்ட் வாங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!