காந்தாரா சாப்டர் 2 வேலைகளில் ரிஷப் ஷெட்டி
ஜூலை 08, 2026
Advertisement
கன்னடத் திரையுலகத்தை "கேஜிஎப்" படத்திற்குப் பிறகு திரும்பிப் பார்க்க வைத்த படம் "காந்தாரா". 2022ல் வெளியான அப்படம் சுமார் 16 கோடி ரூபாய் செலவில் தயாராகி 400 கோடிக்கும் அதிகமாக வெளியானது.
அதன் முன்பாகப் படமாக "காந்தாரா சாப்டர் 1" படம் சுமார் 100 கோடி செலவில் தயாராகி கடந்த வருடம் வெளியாகி 800 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது.
அப்படத்தின் இயக்குனரும், கதாநாயகனுமான ரிஷப் ஷெட்டி அடுத்ததாக ‛காந்தாரா 3" அதாவது "காந்தாரா சாப்டர் 2" படத்திற்கான ஸ்கிரிப்ட் வேலைகளில் அவரது குழு ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
தற்போது "ஜெய் ஹனுமான், சத்ரபதி சிவாஜி மகாராஜ்" ஆகிய படங்களில் நடித்து வருகிறார் ரிஷப் ஷெட்டி. அந்தப் படங்கள் முடிந்த பிறகு "காந்தாரா சாப்டர் 2" ஆரம்பமாகலாம் எனத் தெரிகிறது.
முந்தைய இரண்டு "காந்தாரா" படங்களைத் தயாரித்த ஹொம்பாலே பிலிம்ஸ் இந்த "சாப்டர் 2" படத் தயாரிப்பில் இருக்குமா அல்லது ரிஷப் அவரது சொந்த நிறுவனம் சார்பில் தயாரிப்பாரா என்பது அறிவிப்பு வெளிவரும் போது தெரியும்.

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!