
ஹனுமன் இரண்டாம் பாகத்தில் ரிஷப் ஷெட்டி?
அக் 19, 2024
Advertisement
கடந்த சில மாதங்களுக்கு முன்பு தெலுங்கில் பிரசாந்த் வர்மா இயக்கத்தில் தேஜா சஜா நடித்து வெளிவந்த படம் "ஹனுமன்". இப்படம் குறைவான பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு உலகளவில் ரூ.300 கோடிக்கும் மேலும் வசூலானது. கடந்த சில மாதங்களாக இதன் இரண்டாம் பாகம் உருவாகிறது. இதற்கு " ஜெய் ஹனுமான்" என தலைப்பு வைத்துள்ளதாக தெரிவித்தனர். இதில் ஜெய் ஹனுமான் கதாபாத்திரத்தில் நடிக்க முதலில் கன்னட நடிகர் யஷ் உடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியானதைத் தொடர்ந்து தற்போது காந்தாரா படத்தின் மூலம் பிரபலமான ரிஷப் ஷெட்டி இறுதியில் நடிக்க உள்ளதாக தெரிவிக்கின்றனர்.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!