ரேனிகுண்டா 2 படத்தின் முதல் பார்வை வெளியீடு
ஜூன் 06, 2026
Advertisement
ஆர். பன்னீர்செல்வம் இயக்கத்தில் 2009ம் ஆண்டு வெளியான படம் “ரேனிகுண்டா”. அரசு கூர்நோக்கு இல்லத்தில் இருந்து தப்பிக்கும் ஐந்து சிறுவர்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாகி, விமர்சகர்கள் மற்றும் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது.
இந்நிலையில் “ரேனிகுண்டா - 2” படம் தற்போது உருவாகிறது. இந்த படத்தையும் ஆர். பன்னீர்செல்வம் இயக்குவதோடு தயாரிக்கவும் செய்கிறார். இசையமைப்பாளர் மனு ரவிச்சந்திரன் இசையமைக்க, பாடல்களை கவிஞர்கள் யுகபாரதி மற்றும் விவேகா எழுதியுள்ளனர்.
ஜானி, ஷாலி நிவேகாஸ், அபிமன்யு ஷாமி திலகன், நிஷாந்த், கனிபா, தமிழ்செல்வம், சுந்தீப், ஆஹானா, அருண், ஜெசிந்தா, வேலா ராமமூர்த்தி, ஹரீஷ் பேரடி, சுஜாதா மற்றும் சுர்பி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
முதல் பாகத்தின் தனித்துவமான உலகத்தையும், அதைவிட விறுவிறுப்பான கதைக்களத்தையும் கொண்டு “ரேனிகுண்டா - 2” உருவாகிறதாம். இந்த படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகி உள்ளது. இதை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டார்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!