
விடாமுயற்சி படத்தால் ரிலீஸ் இடைவெளி
மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமையான அடுத்த வாரம் ஜீவா, அர்ஜுன் நடிக்கும் "அகத்தியா" படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அன்றைய தினம் அப்படம் வெளியாகாது எனத் தெரிகிறது. "பிக் பாஸ்" புகழ் ஆரவ் நடிக்கும் "ராஜ பீமா" படம் ஜனவரி 31 வெளியீடு என இன்று அறிவித்துள்ளார்கள். வேறு எந்தப் படத்தின் அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை.
பிப்ரவரி 6ம் தேதி அஜித் நடித்துள்ள "விடாமுயற்சி" படம் வெளிவர உள்ளதால் புதிய படங்களின் வெளியீடுகளில் ஒரு இடைவெளி வர வாய்ப்புள்ளது. அன்றைய தினம் வேறு எந்தப் படமும் வெளியாகவில்லை. "விடாமுயற்சி" படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தால் பிப்ரவரி 14ம் தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்ட படங்கள் கூட தள்ளிப் போக வாய்ப்புள்ளது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!