
ராஷ்மிகாவை ஏமாற்றினாரா அவரது மேனேஜர் ?
ஜூன் 19, 2023
Advertisement
விஜய் நடித்த "வாரிசு" படத்தின் கதாநாயகியான ராஷ்மிகா மந்தனா, தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளிலும் பிஸியாக நடித்து வருகிறார். தற்போது அல்லு அர்ஜுனுடன் "புஷ்பா 2" படத்தில் நடித்து வருகிறார். இதனிடையே, தன்னுடைய ஆரம்ப காலத்திலிருந்து இருந்த மேனேஜரை அவர் நீக்கிவிட்டதாக ஒரு செய்தி வந்து தெலுங்கு திரையுலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஷ்மிகாவிடம் அவர் 80 லட்ச ரூபாய் மோசடி செய்துள்ளதாக சில ஊடகங்களில் செய்திகள் வந்துள்ளன. ஆனால், இது குறித்து ராஷ்மிகா இதுவரை எந்த ஒரு புகாரையும் தெரிவிக்கவில்லை. அவரே இந்தப் பிரச்னையை பேசித் தீர்த்துக் கொண்டுள்ளதாகத் தெரிகிறது. தன்னுடன் நீண்ட காலமாக இருந்தவர் என்பதால் ராஷ்மிகா இதைப் பெரிதாக்க விரும்பவில்லை என்றும் சொல்கிறார்கள்.
ராஷ்மிகா தமிழ், தெலுங்கில் உருவாகி வரும் "ரெயின்போ" படத்திலும் நடித்து வருகிறார்.
ராஷ்மிகா தமிழ், தெலுங்கில் உருவாகி வரும் "ரெயின்போ" படத்திலும் நடித்து வருகிறார்.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!