தமிழில் அறிமுகமாகும் ராப் பாடகர் வேடன்
ஜூலை 14, 2025
Advertisement
ஒளிப்பதிவாளரும், இயக்குனருமான விஜய் மில்டன், ‛ரப் நோட்" நிறுவனத்தின் மூலம் தயாரித்து இயக்கும் புதிய படத்தில் தெலுங்கு சினிமாவின் இளம் நடிகர் ராஜ் தருண் நடிக்கிறார். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் இப்படம் உருவாகிறது. இது கோலி சோடா படங்களின் தொடர்சியாக இருக்கும் என தெரிகிறது. ஏற்கனவே இந்த படத்தில் ஆரி, பரத், சுனில், பால் டப்பா, அம்மு அபிராமி ஆகியோர் இணைந்ததை அறிவித்தனர்.
இப்போது மலையாளத்தை சேர்ந்த ராப் பாடகர் வேடன் இணைந்துள்ளார் என அறிவித்துள்ளனர். மலையாளத்தில் இவர் சமூக பிரச்னைகளைக் கலந்து பாடி மலையாள ரசிகர்களிடம் பிரபலமானவர். மலையாளத்தில் மஞ்சும்மல் பாய்ஸ், நரிவேட்டா, கொண்டல் போன்ற படங்களில் பாடியுள்ளார். இந்த நிலையில் இவர் இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!