ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சியை வெளுத்து வாங்கிய ரஞ்சித்
நவ 06, 2023
தமிழகத்தில் புதிய கலச்சாரமாக பல்வேறு மாவட்டங்களில் ஞாயிற்றுக்கிழமை தோறும் ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி அரசு மற்றும் தனியார் அமைப்புகள் சார்பில் நடத்தப்பட்டு வருகிறது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு நடனம், பாடல் என கலை நிகழ்ச்சிகள் நிகழ்த்தி கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், நடிகர் ரஞ்சித் ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி குறித்து கடுமையாக சாடியுள்ளார்.
அவர் அளித்துள்ள பேட்டியில், "சமீபத்தில் ஒரு கலாச்சாரம் அதிகரித்து வருகிறது. பெண் குழந்தைகளை அரைகுறை ஆடையுடன் தெருவில் ஆடவிடுவது எல்லாம் மனவேதனையாக இருக்கிறது. என்னிடம் அதிகாரம் இருந்தால் அனைவருக்கும் ஆயுள் தண்டனை கொடுத்து விடுவேன். யார் மகனுடனோ யாரோ ஆடலாம்? யார் பெண்ணுடன் யாரோ ஆடலாம்?. இந்நிகழ்ச்சியால் தமிழ்நாடு எதிர்காலத்தில் ஒரு தாய்லாந்து போல மாறிவிடும்" என்று விமர்சித்துள்ளார். ரஞ்சித் பேசிய இந்த கருத்தானது தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!