இவானா வருண் நடிக்கும் ராஞ்சா
ஜூன் 21, 2024
Advertisement
மாடல் உலகில் முன்னணியில் இருக்கும் இவானா வருண் நடிக்கும் படம் "ராஞ்சா". இதில் பிரஜின் நாயகனாக நடிக்கிறார். இவர்கள் தவிர அதிரன், சாம்ப சிவம், பத்மன், அனுபமா குமார் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். கதை, திரைக்கதை, வசனம் எழுதி சந்தோஷ் ராவணன் இயக்குகிறார். ஹரி இசை அமைக்கிறார், கிஷோர் ராமச்சந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தை சி.வி.குமார், கே.சாம்ப சிவம் இணைந்து தயாரித்துள்ளனர். இதன் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.
படம் குறித்து இயக்குனர் சந்தோஷ் ராவணன் கூறும்போது “காதல், திரில்லர் கதையம்சத்தில் இப்படம் தயாராகிறது. போலீஸ் அதிகாரியாக பிரஜின் வருகிறார். அடுத்தடுத்து மூன்று பேர் மர்மமான முறையில் இறந்து போகிறார்கள். பிரஜினும் சில பிரச்னைகளை எதிர்கொள்ள வேண்டி வருகிறது. மர்ம மரணங்களின் பின்னணியில் இருக்கும் விஷயங்கள் என்ன, பிரஜினால் அதை கண்டுபிடிக்க முடிந்ததா என்பது கதை"" என்றார்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!