வாரணாசி படத்திலிருந்து மேலும் ஒரு வீடியோ கசிவு
ஆக 07, 2026
Advertisement
ராஜமவுலி இயக்கி வரும் வாரணாசி படத்தின் படப்பிடிப்பு தற்போது ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பு பலத்த பாதுகாப்பு நிறைந்த ஸ்டுடியோக்களிலும், கட்டுப்பாடான செட்களிலும் நடைபெற்று வந்தபோதிலும், வாரணாசி படத்திலிருந்து காட்சிகள் கசிவது தொடர்கதையாகி வருகிறது.
ஒடிசாவில் படப்பிடிப்பு தொடங்கியதிலிருந்தே சில புகைப்படங்களும் வீடியோக்களும் வெளியாகின. தற்போது 20 வினாடி வீடியோ காட்சி இணையத்தில் பரவி வருகிறது. படத்தின் ஒரு முக்கியமான காட்சியைக் காட்டும் இந்த வீடியோ, படக்குழுவினருக்குப் புதிய அதிர்ச்சியை கொடுத்துள்ளது. இதனால் செக்யூரிட்டியை மேலும் அதிகப்படுத்தியுள்ளார் ராஜமவுலி.
இந்நிலையில் தற்போது ராமோஜி பிலிம் சிட்டியில் புதிய படப்பிடிப்பு அட்டவணை தொடங்கியுள்ளது. இந்த அட்டவணைக்கு முன்னதாக ராஜமவுலி நேரில் சென்று நடிகர்களுக்கான பயிற்சிகளை நடத்தினார். படத்தின் 75 % படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!