
புஷ்பா பட இயக்குனருடன் இணையும் ராம்சரண்
டிச 15, 2024
Advertisement
ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடித்துள்ள படம் கேம் சேஞ்சர். இந்த படம் ஜனவரி பத்தாம் தேதி தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் வெளியாக உள்ளது. தமன் இசையமைத்துள்ள இந்த படத்தில் கியாரா அத்வானி நாயகியாக நடிக்க, எஸ். ஜே. சூர்யா, ஜெயராம், பிரகாஷ்ராஜ், ஸ்ரீகாந்த், அஞ்சலி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்கள். தற்போது இந்த படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தை அடுத்து புஷ்பா, புஷ்பா- 2 படங்களை இயக்கிய சுகுமார் இயக்கும் படத்தில் நடிக்கப் போகிறார் ராம் சரண். இதற்கு முன்பு அவர் இயக்கத்தில் ரங்கஸ்தலம் என்ற படத்தில் நடித்துள்ள ராம் சரண், மீண்டும் இரண்டாவது முறையாக தனது 17வது படத்தின் மூலம் அவருடன் இணையப் போகிறார்.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!