
வெற்றி மாறனின் விடுதலை படத்தில் இணைந்த ராஜீவ் மேனன்
ஆக 25, 2022
Advertisement
வெற்றிமாறன் இயக்கத்தில் காமெடியன் சூரி கதையின் நாயகனாக நடித்து வரும் விடுதலை படத்தில் விஜய் சேதுபதி முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். இளையராஜா இசையமைக்கும் இந்த படம் இரண்டு பாகங்களாக உருவாகி வருகிறது. இப்படத்தின் முதல் பாகத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில் தற்போது இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. முக்கியத்துவம் வாய்ந்த காட்சிகளை படமாக்கி வரும் வெற்றிமாறன் அடுத்தபடியாக ஒரு பிரமாண்டமான சண்டை காட்சியை படமாக்க தயாராகிக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் விடுதலை இரண்டாம் பாகத்திற்கு ஒளிப்பதிவாளரும், இயக்குனருமான ராஜீவ் மேனன் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க கமிட்டாகி இருக்கிறார். இன்னும் சில முக்கிய நடிகர்களும் இரண்டாம் பாகத்தில் இணைய இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!