
நடிகை சுமலதாவின் மகன் திருமணத்தில் பங்கேற்ற ரஜினி
ஜூன் 05, 2023
Advertisement
நடிகர் ரஜினிகாந்தின் நண்பரும் கன்னட நடிகருமான அம்பரீஷ் - நடிகை சுமலதா தம்பதியின் மகன் அபிஷேக்கிற்கு பெங்களூரில் இன்று(ஜூன் 5) காலை திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த திருமணத்திற்கு நடிகர் ரஜினி நேரில் சென்று மணமக்களை வாழ்த்தியிருக்கிறார். இது குறித்த வீடியோ ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. மேலும் ரஜினியின் நண்பரான நடிகர் அம்பரீஷ் கடந்த 2018 ஆம் ஆண்டு உடல்நலக் குறைவால் காலமானார். இவர் ரஜினியுடன் தாய் மீது சத்தியம் என்ற படத்தில் நடித்தார். அதேபோல் நடிகை சுமலதா ரஜினியுடன் முரட்டுக்காளை என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த திருமண நிகழ்ச்சியில் ரஜினி உடன் கேஜிஎப் நடிகர் யஷ் உட்பட பல பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளார்கள்.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!