
தேவாவாக மாறிய ரஜினி
அதன்படி மலையாள நடிகர் சவுபின் ஷாகிர், தெலுங்கு நடிகர் நாகார்ஜூனா, தமிழ் நடிகை ஸ்ருதிஹாசன், நடிகர் சத்யராஜ், கன்னட நடிகர் உபேந்திரா ஆகியோரின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை அடுத்தடுத்து வெளியிட்டனர். தற்போது படத்தின் நாயகனான ரஜினியின் கேரக்டர் போஸ்டரை வெளியிட்டுள்ளனர். அதன்படி இதில் தேவா என்ற வேடத்தில் ரஜினி நடிக்கிறார். அதில் அவரின் கூலி எண் 1421 என்ற பேட்ஜ் இடம் பெற்றுள்ளது.
முன்னதாக மணிரத்னம் இயக்கத்தில் ரஜினி நடித்த தளபதி படத்தில் அவரின் நண்பராக தேவா என்ற தேவராஜ் வேடத்தில் மம்முட்டி நடித்திருந்தார். இதை சுட்டிக்காட்டி ரசிகர்கள் பலரும் இந்த போஸ்டர் மற்றும் அவரின் கேரக்டரை பகிர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!