
தீபாவளி போட்டியில் 3 படங்கள்
சிவகார்த்திகேயன் நடித்துள்ள "அமரன்", ஜெயம் ரவி நடித்துள்ள "பிரதர்" ஆகிய படங்கள் தீபாவளி வெளியீடு என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளன. இப்போது கவின் நடிக்கும் "பிளடி பெக்கர்" படத்தையும் தீபாவளிக்கு வெளியிடுகிறோம் என நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்கள். அதனால், இந்த வருட தீபாவளிக்கு "டாப்" நடிகர்களின் படங்கள் வராமல் அடுத்த கட்ட நடிகர்களின் படங்கள்தான் வெளியாக உள்ளது. சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி, கவின் ஆகியோர்தான் இந்த தீபாவளிக்கு மோத உள்ளனர்.
கமல்ஹாசன் தயாரிக்கும் படம் என்றாலும், ரெட் ஜெயன்ட் மூவிஸ் இப்படத்தை வெளியிடுவதாலும், "அமரன்" படத்திற்கு அதிக தியேட்டர்கள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!