‛ரஜினி 171 பட ஸ்கிரிப்ட் பணி : லோகேஷ் தந்த அப்டேட்
நவ 17, 2023
Advertisement
மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் என தொடர் வெற்றி படங்களை குவித்து இன்று தமிழ் சினிமாவின் உச்ச இயக்குனர்களில் ஒருவராக மாறியுள்ளார் லோகேஷ் கனகராஜ் . சமீபத்தில் நடிகர் விஜய்யை வைத்து "லியோ" படத்தை இயக்கினார். இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூல் ரீதியாக பெரும் வசூலைக் குவித்தது.
இதைத்தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்தின் 171வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இந்நிலையில் ‛அவள் பெயர் ரஜ்னி" என்கிற படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் லோகேஷ் கனகராஜ் கலந்து கொண்டார். அந்த விழாவில் அவர் கூறியதாவது, "அடுத்த வாரத்தில் ரஜினி 171 படத்திற்கான ஸ்கிரிப்ட் எழுதும் பணியை ஆரம்பிக்க போகிறேன். இதன் படப்பிடிப்பு ஏப்ரலில் தொடங்குகிறது," என தெரிவித்தார்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!