பேபி போட்டோகிராபருக்கு போஸ் கொடுத்த துல்கர் சல்மான்
Advertisement
Advertisement
பேபி போட்டோகிராபருக்கு போஸ் கொடுத்த துல்கர் சல்மான்
நவ 17, 2023
அ நிறம் | அளவு
Advertisement
நடிகர் துல்கர் சல்மானை பொறுத்தவரை தென்னிந்தியாவையும் தாண்டி பாலிவுட் வரை பிரபலமாகி பான் இந்தியா நடிகராக மாறிவிட்டார். அதனால் ஒவ்வொரு மொழியிலும் ஒரு படம் என்கிற கணக்கில் தற்போது மாறி மாறி நடித்து வருகிறார். சமீபத்தில் இத்தாலி நகரத்திற்கு சுற்றுலா சென்ற துல்கர் சல்மான் அங்கே உள்ள தெரு ஒன்றில் ஒரு காரின் முன்பாக நின்று தன்னை புகைப்படம் எடுக்கும் ஒரு குட்டி குழந்தைக்கு கியூட்டாக போஸ் கொடுத்து அந்த குழந்தையை ஒரு போட்டோகிராபராகவே மாற்றிவிட்டார். இந்த புகைப்படத்தை தனது சோசியல் மீடியாவிலும் பகிர்ந்துள்ள துல்கர் சல்மான், “நீ சரியான ஆள் தான் என்பதை நான் ஒத்துக் கொள்கிறேன்” என்று அந்த குழந்தையை பாராட்டி உள்ளார். இந்த புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது.
வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!