
மீண்டும் கமல்ஹாசன், ரஜினிகாந்த் கூட்டணி?
40 ஆண்டு காலத்திற்கும் மேலாக இருவரும் இணைந்து நடித்ததில்லை. இப்போது இருவரும் மீண்டும் இணைய உள்ளார்கள் எனத் தகவல். ஆனால், நடிகர்களாக அல்ல, தயாரிப்பாளர்களாக. கமல்ஹாசன் நடித்து வெளிவந்த "விக்ரம்" படத்திற்கு முன்பாக கமல்ஹாசன் தயாரிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிக்க ஒரு படத்தின் பேச்சுவார்த்தை ஆரம்பமானது. ஏனோ, சில காரணங்களால் அது நின்று போனது. அதற்குப் பிறகுதான் கமல்ஹாசன் நடிக்க "விக்ரம்" படத்தை இயக்கினால் லோகேஷ்.
இப்போது மீண்டும் பேச்சுவார்த்தை ஆரம்பமாகி உள்ளதாம். லோகேஷ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்க ஒரு படத்தை உருவாக்கப் பேசி வருகிறார்களாம். அதே சமயம், கமல்ஹாசனுடன் அப்படத்தை இணைந்து தயாரிக்க ரஜினி விரும்புவதாகத் தகவல். "விக்ரம்" படத்திற்காக மட்டும் கமல்ஹாசனுக்கு 300 கோடி வரை வருவாய் கிடைத்துள்ளது. அது போல கமல், ரஜினி, கூட்டணி சேர்ந்தால் அதைவிட அதிகமாக வருவாய் கிடைக்க வாய்ப்புள்ளது. எனவேதான் தானும் தயாரிப்பில் சேருகிறேன் என ரஜினி தரப்பு சொல்கிறதாம். எல்லாம் நல்லபடியாக கூடி வந்தால் விரைவில் அறிவிப்பு வரலாம் எனத் தெரிகிறது.
விஜய் நடிக்க லோகேஷ் இயக்கும் படம் முடிந்த பிறகு, ரஜினி நடிக்க நெல்சன் இயக்கும் படம் முடிந்த பிறகு லோகேஷ், ரஜினி, கமல் படம் ஆரம்பமாகலாம்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!