
ஹிந்தியில் வெளியான பின் தமிழில் வெளியாகும் ராஜ பீமா
ஜன 28, 2025
Advertisement
நரேஷ் சம்பத் இயக்கத்தில், பிக்பாஸ் புகழ் ஆரவ், ஆஷிமா நர்வால், யாஷிகா ஆனந்த் மற்றும் பலர் நடித்துள்ள படம் "ராஜ பீமா". பிக்பாஸ் முதல் சீசனில் கலந்து கொண்ட ஆரவ் அப்போது மிகவும் பிரபலமாக இருந்தார். அவரை கதாநாயகனாக வைத்து சில படங்கள் ஆரம்பமாகின. இருந்தாலும் தனக்குக் கிடைத்த பிரபலத்தை ஆரவ் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை.
இப்போது தியேட்டர்களில் வெளியாக உள்ள இந்தப் படத்தை, இரண்டு வருடங்களுக்கு முன்பே இந்தப் படத்தை ஹிந்தியில் டப்பிங் செய்து யூடியுப் தளங்களில் வெளியிட்டுள்ளார்கள். அப்படி வெளியான ஒரு படத்தை இப்போது தியேட்டர்களில் வெளியிடுவது ஆச்சரியமாக உள்ளது. 2018ம் ஆண்டே இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகி உள்ளது. 2019ல் இப்படத்தின் டிரைலரையும் வெளியிட்டுள்ளார்கள். ஆனால், இத்தனை வருட தாமதத்திற்குப் பிறகு படம் தமிழில் வெளியாக உள்ளது.
பிக்பாஸ் முதல் சீசனில் கலந்து கொண்ட ஆரவ், ஓவியா இடையில் காதல் என அப்போது பரபரப்பாகப் பேசப்பட்டது. இப்படத்தில் ஓவியா ஒரு பாடலுக்கு நடனமாடி உள்ளார். பல்வேறு காரணங்களால் தள்ளிப்போன படம், இத்தனை வருடங்களுக்குப் பிறகு இந்த வாரம் ஜனவரி 31ம் தேதி தியேட்டர்களில் வெளியாகிறது.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!