
ரகு தாத்தா படப்பிடிப்பு நிறைவு
மே 26, 2023
Advertisement
நடிகை கீர்த்தி சுரேஷ் சமீபகாலமாக முதன்மை கதாபாத்திரத்தில் படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். தற்போது புதுமுக இயக்குனர் சுமன் குமார் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் "ரகு தாத்தா". இந்த படத்தை "கேஜிஎப்", "காந்தாரா" போன்ற படங்களை தயாரித்த ஹொம்பாலே பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். இந்த படத்தில் எம்.எஸ்.பாஸ்கர், தேவதர்ஷினி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். சில மாதங்களுக்கு முன்பு துவங்கிய இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றது. இப்போது இந்த படத்தின் படப்பிடிப்பு இன்றுடன் நிறைவுபெற்றுள்ளதை கேக் வெட்டி கொண்டாடி போட்டோ உடன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!