
தமிழ் ரசிகர்களைக் கவராத புஷ்பா… புஷ்பா…
தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், ஹிந்தி, பெங்காலி ஆகிய மொழிகளில் வெளியான அப்பாடலுக்கு தமிழில் மட்டுமே மிகவும் குறைவான பார்வைகள் கிடைத்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்குப் பாடல் யு டியூபில் 21 மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளது. அதே சமயம் தமிழ்ப் பாடலுக்கு ஒரே ஒரு மில்லியன் பார்வைகள் மட்டுமே கிடைத்துள்ளது. பெங்காலி மொழி பாடலுக்குக் கூட 2 மில்லியன் பார்வைகள் கிடைத்துள்ள நிலையில் தமிழ் மொழிப் பாடலுக்கு அதில் பாதியளவுதான் பார்வைகள் கிடைத்துள்ளது.
ஹிந்தி மொழி பாடல் 24 மில்லியன் பார்வைகளையும், கன்னடம், மலையாளம் 1.8 மில்லியன் பார்வைகளையும் கடந்துள்ளன.
"புஷ்பா" முதல் பாக பாடல்கள் தமிழில் நல்ல வரவேற்பைப் பெற்றன என்பது இங்கு குறிப்பிட வேண்டிய ஒன்று.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!