ரஷ்யாவை கலக்கும் புஷ்பா
ஜன 04, 2023
Advertisement
சமீபகாலமாக இந்திய படங்களுக்கு ரஷ்யாவில் அதிக சந்தை ஏற்பட்டுள்ளது. இங்கு தயாராகும் ஹீரோயிச படங்களை மக்கள் விரும்பி பார்க்கிறார்கள். குறிப்பாக பாலிவுட் படங்கள் அதிகமாக வெளியிடப்படுகிறது. கடைசியாக ஹ்ரித்திக் ரோஷன், டைகர் ஷெரப் நடிப்பில் இந்தியில் வெளியான "வார்" படம் தான் ரஷ்யாவில் வெளியான இந்திய படங்களில் அதிகபட்ச வசூலாக 1.7 கோடி ரூபிள் வசூலித்து சாதனை படைத்தது.
இந்த நிலையில் அல்லு அர்ஜூன் நடிப்பில் வெளியான "புஷ்பா தி ரைஸ்" ஒரு மாதத்திற்கு முன்பாக ரஷ்யாவில் வெளியிடப்பட்டது. படம் இதுவரை 1.02 கோடி ரூபிளை வசூலித்துள்ளது. மேலும் 774 தியேட்டர்களில் திரையிடப்பட்ட இந்த படம் இதுவரை எந்த தியேட்டரில் இருந்தும் வெளியேறவில்லை. இன்னும் ஒரு சில நாட்களில் பாலிவுட் படமான வார் படத்தின் சாதனையை புஷ்பா முறியடிக்கும் என்கிறார்கள்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!