மீண்டும் படம் இயக்கும் தனுஷ்?
ஜன 04, 2023
Advertisement
தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவரான தனுஷ் இதற்கு முன்பு " ப பாண்டி" படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அப்படத்திற்குப் பிறகு நாகார்ஜுனா, எஸ்ஜே சூர்யா, சரத்குமார், ஸ்ரீகாந்த், அதிதி ராவ் ஹைதரி ஆகியோருடன் அவரும் நடிக்க ஒரு படத்தை இயக்க ஆரம்பித்தார். "நான் ருத்ரன்" எனப் பெரியடப்போவதாக சொல்லப்பட்ட அந்தப் படத்தின் படப்பிடிப்பு சில காரணங்களால் நின்று போனது. சரித்திரப் படமாக உருவான அந்தப் படத்தை கடந்த வருடமே மீண்டும் ஆரம்பிக்கப் போவதாக ஒரு தகவல் வெளியானது. ஆனால், இதுவரை ஆரம்பிக்கவில்லை.
இந்நிலையில் தனுஷ் அடுத்து இயக்க உள்ள ஒரு படம் பற்றி தகவல் வெளியாகி உள்ளது. எஸ்ஜே சூர்யா, விஷ்ணு விஷால் ஆகியோருடன் தனுஷ் நடித்து இயக்க உள்ள ஒரு படம் விரைவில் ஆரம்பமாக உள்ளதாம். அது குறித்து பேச்சு வார்த்தைகளும் நடந்து வருவதாகச் சொல்கிறார்கள். விரைவில் அதற்கான அறிவிப்பு வரலாம் என்றும் தெரிகிறது.

Tags
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!