ரிலீசுக்கு முன்பே 250 கோடி வசூலித்த புஷ்பா
ஜூலை 12, 2024
Advertisement
மிகப்பெரிய வெற்றி பெற்ற "புஷ்பா" படத்தின் இரண்டாம் பாகம் "புஷ்பா : தி ரூல்" என்ற பெயரில் தயாராகி வருகிறது. அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா, பஹத் பாசில் உள்ளிட்ட முதல் பாகத்தில் நடித்தவர்களே இதிலும் நடித்து வருகிறார்கள். இந்த படம் வருகிற டிசம்பர் மாதம் 6ம் தேதி வெளிவருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ரிலீசுக்கு முன்பே இந்த படம் 250 கோடி ரூபாய் வசூலித்திருப்பதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா அளித்த பேட்டி ஒன்றில் கூறும்போது “புஷ்பா தி ரூல் படம் ஓடிடி மற்றும் சாட்டிலைட் உரிமங்கள் மூலம் 250 கோடி ரூபாய் வசூலித்துள்ளது, சமீபகாலமாக தியேட்டர் வசூல் குறைந்துள்ள சூழ்நிலையில், "புஷ்பா 2: தி ரூல்" திரைப்படம் "கேஜிஎப் 2" படத்தை விட பாக்ஸ் ஆபிஸில் அதிக வசூலை ஈட்டித் தரும். "புஷ்பா 2" வெளியாகி தெலுங்கு மற்றும் இந்திய சினிமாவில் பல புதிய சாதனைகளை படைக்கும்” என்கிறார்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!