தமிழ்ப் படங்களுக்கு இணையாக வெளியான புஷ்பா 2
டிச 05, 2024
Advertisement
தமிழகத்தில் சுமார் 1000 தியேட்டர்கள் உள்ளன. முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித் ஆகியோர் நடிக்கும் படங்கள் தான் அதிகமான தியேட்டர்களில் வெளியாகும். ஆனால், மற்ற மொழிகளிலிருந்து டப்பிங் ஆகி வரும், குறிப்பாக தெலுங்கிலிருந்து டப்பிங் ஆகி வரும் படங்களுக்கு அவ்வளவு தியேட்டர்கள் கிடைக்காது.
ஆனால், முதல் முறையாக தமிழ்ப் படங்களுக்கு இணையாக "புஷ்பா 2" படம் இன்று(டிச., 5) வெளியாகி உள்ளது. தமிழகத்தில் மட்டும் சுமார் 800 தியேட்டர்களில் இப்படத்தைத் திரையிட்டுள்ளார்கள். மற்ற மொழிகளிலிருந்து இங்கு டப்பிங் ஆகி வரும் ஒன்று இவ்வளவு தியேட்டர்களில் வெளியாவது இதுவே முதல் முறை.
படத்திற்கான முன் பதிவு சுமாராக இருந்தாலும் படத்திற்கான விமர்சனங்கள் வந்த பிறகு வரவேற்பு இன்னும் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!