
இன்னொரு முறையும் திருமணம் செய்ய தயார் - புகழ் பதிலடி
செப் 04, 2022
Advertisement
சின்னத்திரையில் ‛குக் வித் கோமாளி" நிகழ்ச்சி மூலம் பிரபலமான புகழ் தற்போது படங்களிலும் நடிக்கிறார். சில தினங்களுக்கு முன் தனது நீண்டநாள் காதலி பென்சியாவை திண்டிவனத்தில் இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டார். புதுமண தம்பதியரை பலரும் வாழ்த்தினர். அதேசமயம் புகழ் ஓராண்டுக்கு முன்பாகவே பென்சியாவை சுயமரியாதை திருமணம் செய்து கொண்டதாக போட்டோக்கள் வெளியாகின. இதனால் புகழை பலரும் விமர்சித்தனர்.
இந்நிலையில் தன் மீதான விமர்சனத்திற்கு பதிலடி தரும் விதமாக புகழ் பதிவிட்டுள்ளதாவது : ‛‛என் தந்தை அன்பிற்கு ஒரு முறை… என் தாய் அன்பிற்கு ஒரு முறை… என் மனைவி குடும்பத்தார் அன்பிற்கு ஒரு முறை…வேறு அன்பு உள்ளங்கள் ஆசை பட்டால் மேலும் ஒரு முறை தயார் . இந்தியனாக இருக்கிறேன். எல்லா புகழும் இறைவனுகே"" என பதிவிட்டுள்ளார்.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!