
தனுஷுக்கு அழுத்தம் தரும் தமிழ் தயாரிப்பாளர்கள்
இதனிடையே, தெலுங்குத் தயாரிப்பாளர்கள் இருவருக்கு தன்னுடைய அடுத்த இரண்டு படங்களைத் தயாரிக்கும் வாய்ப்பை வழங்கியுள்ளார் தனுஷ். தனுஷ் தற்போது அவரது 43வது படம் என்று சொல்லப்படும் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை கார்த்திக் நரேன் இயக்கி வருகிறார்.
இப்படத்திற்குப் பிறகு தனுஷ் அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் "நானே வருவேன்" படத்தில் நடிக்க உள்ளார். இதற்கடுத்து மித்ரன் ஜவஹர் இயக்க உள்ள படத்தில் நடிக்கப் போகிறாராம். இந்த இரண்டு படங்களுக்குப் பிறகுதான் தெலுங்கு தயாரிப்பாளர்களின் படங்களில் நடிக்க தேதிகளை ஒதுக்குவாராம்.
தனுஷின் புதிய அறிவிப்புகளைத் தொடர்ந்து அவரை வைத்து படம் தயாரித்து வரும் தமிழ் தயாரிப்பாளர்கள் ஆச்சரியமடைந்துள்ளனர். தங்களது படங்களை நடித்துக் கொடுத்த பிறகுதான் தெலுங்கு தயாரிப்பாளர்களின் படங்களுக்குப் போக வேண்டும் என அழுத்தம் கொடுக்கப்பட்டதாக கோலிவுட்டில் கிசுகிசுக்கிறார்கள். எனவே, தெலுங்கு தயாரிப்பாளர்களுக்கான தனுஷின் புதிய படங்கள் 2022ல் தான் ஆரம்பமாகுமாம்.
தனுஷ் திடீரென தெலுங்குத் தயாரிப்பாளர்கள் பக்கம் தாவியதன் ரகசியமும் தற்போது வெளிவந்துள்ளது. 100 கோடி ரூபாய்க்கும் அதிகமாக செலவு செய்து அவர் கட்டி வரும் பெரிய பங்களாவிற்கு பணம் தேவைப்படுகிறதாம். தெலுங்கில் எதிர்பார்த்ததைவிட அதிக சம்பளம் தருவதால்தான் அந்தப் பக்கம் தாவுகிறாராம்.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!