தயாரிப்பாளர் ஏக்நாத் மறைவு
மே 24, 2022
Advertisement
திரைப்படத் தயாரிப்பாளர் ஏக்நாத் மரணம் அடைந்தார். தயாரிப்பாளரும், "ஏக்நாத் வீடியோஸ்" உரிமையாளருமான ஏக்நாத், 78. இவர் பாக்யராஜ் எழுதி இயக்கி நடித்த, பவுனு பவுனு தான் படத்தை தயாரித்திருந்தார். மேலும், வெள்ளையத் தேவன், மவுன மொழி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட படங்களை தயாரித்துள்ளார். கமல் நடித்த, இந்திரன் சந்திரன் படம் உள்பட பல படங்களை, "டப்பிங்" செய்தும் வெளியிட்டுஉள்ளார்.
சென்னை அருகே திருமால்பூரில் வசித்து வந்தவர், சில மாதங்கள் உடல் நலக் குறைவால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு காலமானார்.இவருக்கு கவுரி என்ற மனைவியும், சுரேஷ் என்ற மகனும், அனுராதா என்ற மகளும் உள்ளனர். மகள் அமெரிக்காவில் உள்ளதால், அவர் வந்ததும், இறுதிச் சடங்குகள் நாளை திருமால்பூரில் நடக்க உள்ளன.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!