கேப்டன் மில்லர் படப்பிடிப்பில் இணைந்த பிரியங்கா மோகன்
ஜன 22, 2023
Advertisement
சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் திரைப்படம் ‛கேப்டன் மில்லர்". இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். தனுஷிற்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்கிறார். மேலும் சந்தீப் கிஷான், நிவேதா சதிஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்து அடுத்தக்கட்ட படப்பிடிப்பு இன்று(ஜன., 22) குற்றாலத்தில் துவங்குகிறது. கன்னட நடிகர் சிவராஜ்குமாரும் தனுசுக்கு அண்ணனாக இப்படத்தில் இணைந்து நடிக்கவுள்ளார்.
இந்நிலையில் இன்று நடக்கும் இப்படத்தின் படப்பிடில் நடிகை பிரியங்கா மோகன் இணைந்துள்ளார். மேலும் படப்பிடிப்பு தளத்தலில் இருந்து அழகிய லொகேஷன் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் . குற்றாலத்தில் இப்படம் தொடர்ந்து 80 நாட்களுக்கு படமாக்கப்படுகிறது . அதன் பிறகு தனுஷ் தான் இயக்கும் அடுத்த படத்தில் நடிக்க உள்ளார் .

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!