
தொடர்ந்து டார்கெட் செய்யப்படும் பிரியங்கா மோகன்
கடந்த சில நாட்களாக பிரியங்கா மோகன் அரை குறை ஆடையுடன் பாத்ரூமில் இருப்பது போன்ற ஒரு புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியானது. அது குறித்து பிரியங்கா மோகன், “ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட தவறான புகைப்படம் ஒன்று சுற்றி வருகிறது. இது போன்ற தவறான புகைப்படங்களை வெளியிடுவதை நிறுத்துங்கள். ஏஐ என்பது நெறிமுறைக்கு உட்பட்டு செய்யப்பட வேண்டிய ஒரு கிரியேட்டிவிட்டி, இப்படி தவறாக செய்வதற்கல்ல. என்ன கிரியேட் செய்கிறோம் என்பதை அறிந்து அதை பகிருங்கள், நன்றி,” என்று குறிப்பிட்டுள்ளார்.
பவன் கல்யாண் ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்து வெளிவந்த தெலுங்குப் படமான "ஓஜி" படம் 300 கோடி வசூலைக் கடந்து ஓடி வருகிறது. அந்த வெற்றியைக் கண்டு பொறாமைப்பட்ட சிலர்தான் இப்படி செய்கிறார்களோ என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!