
தற்கொலை எண்ணத்தில் இருந்து நமீதாவை மீட்டெடுத்த பிரியா ராமன்
இது குறித்து நமீதா கூறியுள்ளதாவது, "எல்லாம் இருந்தும் ஏதும் இல்லாத ஒரு வெறுமையான உணர்வு, அடுத்து என்ன செய்வது என்று தெரியாத குழப்பம் காரணமாக என் மீதான கட்டுப்பாட்டை முழுமையாக இழக்கும் நிலைக்குச் சென்றேன். அப்போது எனது மொபைலுக்கு தொடர்ந்து இஸ்கான் குறித்த செய்திகள் வந்து கொண்டே இருந்தன. அதனால் அங்கே சென்று பார்ப்போமே என இஸ்கான் கிருஷ்ணர் கோவிலுக்குச் சென்று அங்கே சத்தம் இன்றி அழுதேன்.
அந்த சமயத்தில் நடிகை பிரியா ராமன் வேறு ஒரு நிகழ்வுக்கு செல்ல வேண்டியவர் எதேச்சையாக அங்கே வந்திருந்தார். நான் வந்திருப்பதை கேள்விப்பட்டு என்னிடம் வந்து எனது மன அழுத்தம் குறித்து தெரிந்துகொண்டு, “கவலைப்படாதே.. நான் உனக்கு ஒரு மருந்து தருகிறேன், அதை தினமும் தவறாமல் செய்ய வேண்டும்” என்று கூறியதுடன் ஒரு துளசி மாலையை என் கையில் கொடுத்து அதை வைத்து எவ்வாறு தியானம் செய்ய வேண்டும் என கற்றுக் கொடுத்தார். அந்த இக்கட்டான சூழலில் அவர் எனக்கு அளித்த ஆறுதலும், ஆன்மிக பலமுமே என்னை மரண விளிம்பிலிருந்து மீட்டு மீண்டும் வாழ்க்கைக்குத் திருப்பிக் கொண்டு வந்தது" என்று கூறியுள்ளார் நமீதா.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!