
ஸ்கை டைவிங் செய்த பிரியா பவானி சங்கர்
ஆக 27, 2022
Advertisement
சமீபத்தில் திரைக்கு வந்த யானை, திருச்சிற்றம்பலம் போன்ற படங்களில் நடித்தவர் பிரியா பவானி சங்கர். அதையடுத்து ருத்ரன், அகிலன், பத்து தல, இந்தியன்-2 என பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். தற்போது தனது காதலருடன் சுவிட்சர்லாந்து நாட்டுக்கு சுற்றுலா சென்றுள்ள பிரியா பவானி சங்கர் அங்கு ஸ்கை டைவிங் செய்த வீடியோ, புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அதோடு முதன்முறையாக ஸ்கை டைவிங் செய்த தனது திரில்லிங்கான அனுபவத்தையும் அவர் வீடியோவில் தெரிவித்து இருக்கிறார். பிரியாவின் இந்த துணிச்சலான செயலுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!