பிரியா பவானி சங்கரின் 10 ஆண்டு காதல்
ஜன 28, 2021
Advertisement
சின்னத்திரையில் புகழ் பெற்று மேயாதமான் படத்தில் சினிமாவுக்கு வந்தவரான பிரியா பவானி சங்கர், தற்போது கமல், லாரன்ஸ், அருண் விஜய் என முன்னணி நடிகர்களின் படங்களில் நடிக்கிறார். அதோடு தெலுங்கில் இவர் நடிக்கும் அகம் பிரமாஸ்மி என்ற படம் ஐந்து மொழிகளில் தயாராகி வருகிறது. இதனால் கூடிய சீக்கிரமே தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராகி விடுவார் பிரியா பவானி சங்கர்.
சினிமாவுக்கு வருவதற்கு முன்பே ராஜ்வேல் என்பவரை காதலித்து வந்தார் பிரியா பவானி சங்கர். இந்நிலையில் பத்து ஆண்டுகளுக்கு முன்பு காதலருடன் இருந்த ஒரு போட்டோவையும், இப்போதுள்ள ஒரு போட்டோவையும் பகிர்ந்து, ""2011, 2021. இந்த 10 ஆண்டுகளில் வாழ்க்கையில் நிறைய மாற்றங்கள். ஆனால் நமக்குள் உள்ள பிணைப்பு மட்டும் மாறவில்லை. எது நடந்தாலும் அது மாறாது. உனக்கு இந்த உலகத்தில் சிறந்த விஷயங்கள் கிடைக்க வேண்டும்"" என பதிவிட்டுள்ளார்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!