
விக்ரம் குழுவுக்கு வாழ்த்து சொன்ன கேஜிஎப் இயக்குனர்
"கேஜிஎப், விக்ரம்" இரண்டு படங்களுக்கும் ஸ்டன்ட் மாஸ்டர்களாக வேலை பார்த்த அன்பறிவு, "விக்ரம்" படத்தின் சண்டைக் காட்சிகள் படமாக்கப்பட்ட மேக்கிங் வீடியோ ஒன்றை சில தினங்களுக்கு முன்பு வெளியிட்டிருந்தனர். அதைப் பார்த்த பின் "கேஜிஎப்" இயக்குனர் பிரசாந்த் நீல் "விக்ரம்" படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
“கமல்ஹாசன் சார், விஜய் சேதுபதி, பகத் பாசில் ஆகியோரை ஒன்றாகப் பார்ப்பது ஒரு விருந்து. இயக்குனர் லோகேஷ் கனகராஜின் வேலைப் பார்த்து எப்போதும் பெரிதாக வியக்கிறேன். அனிருத், நீங்கள் ஒரு ராக்ஸ்டார். எங்கள் மாஸ்டர்கள் அன்பறிவு பற்றி மிகப் பெருமையாக உள்ளது. உங்களுக்கு மேலும் வெற்றிகள் கிடைக்கட்டும். ரோலக்ஸ், சூர்யா சார், இன்னும் முடியவில்லை. நீங்கள் நெருப்பு,” எனக் குறிப்பிட்டுள்ளார்.





















வாசகர்கள் கருத்துகள்
கருத்துகள் ஏற்றப்படுகின்றன…