
குட் பேட் அக்லி படத்தில் இணைந்த பிரசன்னா
அக் 01, 2024
Advertisement
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் குமார் "குட் பேட் அக்லி" என்கிற படத்தில் நடித்து வருகிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். ஏற்கனவே இந்த படத்தில் த்ரிஷா, சுனில், அர்ஜுன் தாஸ், ராகுல் தேவ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்போது இப்படத்தில் மற்றொரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க நடிகர் பிரசன்னா இணைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அஜித்துடன் வலிமை படத்திலேயே இணைந்து நடிக்க வேண்டியவர் பிரசன்னா என்பது குறிப்பிடத்தக்கது.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!