நடிகர் சங்கத் தேர்தலில் முதல்வர்களை இழுக்க வேண்டாம் - பிரகாஷ் ராஜ் கண்டனம்
அக் 02, 2021
Advertisement
தெலுங்கு நடிகர் சங்கமான "மா" சங்கத்திற்கு நிர்வாகிகளைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் அக்டோபர் 10ம் தேதியன்று நடைபெற உள்ளது. பிரகாஷ் ராஜ் தலைமையில் ஒரு அணியும், மஞ்சு விஷ்ணு தலைமையில் மற்றொரு அணியும் முக்கிய போட்டியாளர்களாக உள்ளனர். பிரகாஷ் ராஜ் தெலுங்கரல்ல, அவர் ஒரு கன்னடர் என ஆரம்பத்திலிருந்தே எதிரணியினர் அவரைப் பற்றிப் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
ஆனால், அவர்களுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, “நான் தெலுங்கர் அல்லதான். கர்நாடகாவில் பிறந்தவன்தான் ஆனால், தெலுங்கு மாநிலங்களில்தான் நடிகராக வளர்ந்தவன். 9 நந்தி விருதுகள், 2 தேசிய விருதுகள் என்னிடம் உள்ளன. எதிரணியினரிடம் இத்தனை விருதுகள் உள்ளதா ?. தெலுங்கு மொழி பற்றி எந்த எல்லைக்கு வேண்டுமானாலும் என்னால் பேச முடியும். எதிரணியில் உள்ளவர்கள் இது குறித்து என்னுடன் போட்டி போட முடியுமா ?.,” என்றும் கேட்டுள்ளார்.
மேலும், “எதிரணியினர் தேவையில்லாமல் தெலுங்கு மாநிலங்களின் இரு முதல்வர்களையும் இந்தத் தேர்தலில் இழுக்கின்றனர். அவர்கள் இருவருமே மிகவும் பிஸியாக உள்ளனர். அவர்கள் இந்தத் தேர்தலில் ஆர்வம் காட்டவும் இல்லை. அவர்களைத் தேவையில்லாமல் இந்தத் தேர்தலில் சம்பந்தப்படுத்தி இந்தத் தேர்தலுக்கு அரசியல் சாயம் பூசுகிறார்கள்,” என்றும் குற்றம் சாட்டுகிறார்.

Tags
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!