50 கோடி சம்பளத்தைக் குறைத்த பிரபாஸ் ?
ஜூன் 05, 2025
Advertisement
மாருதி இயக்கத்தில் பிரபாஸ், மாளவிகா மோகனன், நிதி அகர்வால் மற்றும் பலர் நடிக்கும் தெலுங்குப் படம் "ராஜாசாப்". பான் இந்தியா படமாக ஹிந்தி, தமிழ், கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் டிசம்பர் 5ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் படத்தை பிரபாஸ், சைப் அலிகான், கிரித்தி சனோன் நடித்து 2023ல் வெளிவந்த "ஆதிபுருஷ்" படத்தை ஹிந்தியில் வெளியிட்ட எஎ பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அந்தப் பட வெளியீட்டால் அந்நிறுவனத்திற்கு நிறையவே நஷ்டம். எனவே, அவர்கள் தயாரிக்கும் "ராஜாசாப்" படத்திற்காக தன்னுடைய சம்பளத்திலிருந்து 50 கோடியை பிரபாஸ் குறைத்துக் கொண்டுள்ளதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது.
தற்போது ஒரு படத்திற்கு 150 கோடி ரூபாய் சம்பளம் வாங்குகிறார் பிரபாஸ் என்கிறார்கள். இந்தப் படத்துடன் "பாஜி, ஸ்பிரிட், சலார் 2, கல்கி 2" ஆகிய படங்கள் பிரபாஸ் கைவசம் உள்ளன.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!